அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும், அங்கு பயின்று வரும் மாணவர்களை மாற்று பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என தொடக்கப்பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தொடக்கப்பள்ளிகள் நடத்த அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூடுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத தொடக்கப்பள்ளிகள் இனி செயல்பட கூடாது.


அங்கீகாரம் இல்லாத பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அங்கு பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் பொருட்டு, அவர்களை மாற்று பள்ளிகளில் சேர்க்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் மாவட்டத்தில் செயல்படுமாயின் அதற்கு அந்தந்த வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்கள் தான் முழு பொறுப்பு. அரசு விதிமுறையை நடைமுறைப்படுத்த மறந்த கல்வி அலுவலர்கள் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.