சென்னை, : மத்திய - மாநில அரசுகளின் சார்பில் நடத்தப்படும், ஆசிரியர் தகுதி தேர்வுகளின் சான்றிதழ்கள், ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது, சமீபத்தில் மாற்றப்பட்டது.


அதற்கு பதிலாக, ஆயுள் முழுமைக்கும் செல்லும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பில், 'மத்திய ஆசிரியர் தகுதி தேர்வான 'சிடெட்' முடித்தவர்களின் சான்றிதழ்கள், அவர்களின் ஆயுள் காலம் முழுதும், பணியில் சேர செல்லத் தக்கது. 'ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கு, புதிய சான்றிதழ் எதுவும் வழங்கப்படாது' எனக் கூறப்பட்டுள்ளது.