சென்னை : வேளாண் துறை ஊழியர்கள் அனைவரும், இன்று முதல் பணிக்கு வர, வேளாண் துறை கமிஷனர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.த
மிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, சில தளர்வுகளுடன், 21ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில், 30 சதவீத பணியாளர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், வேளாண் துறை பணியாளர்கள், இன்று முதல், 100 சதவீதம் பணிக்கு வர வேண்டும் என, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.மேட்டூர் அணை திறக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி துவங்க உள்ளதால், துறை பணிகளை கவனிக்க, அனைவரையும் பணிக்கு வர உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments
Post a Comment