நீட் தேர்வு தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் நிறைய கருத்துகள் வந்திருப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். நீட் தாக்கம் குறித்த மூன்றாம் கட்ட ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 86 ஆயிரத்து 342 பேரிடம் இருந்து நீட் தேர்வுகள் குறித்த கருத்துகள் வந்திருப்பதாகவும், அனைத்தையும் ஆராய்ந்த பிறகே அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் கூறினார்.