ஆட்சேபனைக்கு தீர்வு காண வழிபிளஸ் 2 மாணவர்களுக்கு, மதிப்பெண்களை வழங்கும் முறை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியமும், சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலும், தனித்தனியே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தன.சி.பி.எஸ்.இ., மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்யும் முறையில் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில், அதற்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.சி.ஐ.எஸ்.சி.இ., மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:ஆட்சேபனை இருக்கும் மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் எழுத்துப்பூர்வமாக மனு சமர்ப்பிக்க வேண்டும். பின், அந்த மனுவில் கூறப்பட்டுள்ள காரணம் ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில், அந்த மனு, சி.ஐ.எஸ்.சி.இ.,க்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
0 Comments
Post a Comment