மதுரை:'தமிழகத்தில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்தவுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்' என தமிழ்நாடு அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில தலைவர் பீட்டர்ராஜா தெரிவித்துள்ளதாவது:பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சேர்க்கை நடக்கிறது. நுழைவுத் தேர்வு அடிப்படையிலோ அல்லது மதிப்பெண் அடிப்படையிலோ மருத்துவ படிப்புக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அவசியமாகிறது.

எனவே பொதுத் தேர்வை நடத்தினால் மட்டுமே கல்வி பாதிக்காது. மாணவர் உயிர்ப் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தொற்று முழுவதும் குறைந்த பின் அந்தந்த பள்ளிகளில் தேர்வு மையம் உருவாக்கி தேர்வு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.