புதுடில்லி, : சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விளக்கம் : சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சிலின் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை, மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள மதிப்பெண் மதிப்பீட்டு வழிமுறை குறித்தும், உச்ச நீதிமன்றத்தில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர் மற்றும் பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
'இம்ப்ரூவ்மென்ட்'இந்த மனு மீதான விசாரணையின் போது, 'தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு, ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில், 'இம்ப்ரூவ்மென்ட்' எனப்படும், மதிப்பெண் அதிகரிக்கும் தேர்வு நடத்தப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்தது.இந்நிலையில் இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., வகுத்துள்ள மதிப்பெண் மதிப்பீட்டு வழிமுறை மிகவும் நியாயமானதாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும், 'இம்ப்ரூவ்மென்ட்' தேர்வு நடத்துவது தொடர்பான முடிவையும் ஏற்றுக் கொண்டனர்.இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
0 Comments
Post a Comment