இன்று மே17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனையினை தொடங்கினார்.

புதிய கல்விக்கொள்கை தொடர்பான கூட்டத்தை மாநில கல்வித்துறை அமைச்சர் உடன் நடத்துவதே ஏற்புடையது என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் மூலம் வலியுறுத்திருந்தார். அரசின் சார்பில் மிக முக்கிய கருத்துகள், பரிந்துரைகளை தெரிவிக்க தயார் என்று தெரிவித்திருந்தார். 

இன்நிலையில் அவரது கடிதத்தை மத்திய அரசு நிராகரித்ததாக தகவல். எனவே இன்றைய ஆலோசனைக் கூட்டத்தை தமிழகம் புறக்கணித்துள்ளது.