மதுரை:மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட அனைத்து கல்லுாரிகளிலும் இன்று (மே 24) நடக்க இருந்த ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஊரடங்கு நீட்டிப்பால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


கல்லுாரிகளில் 2021 ஏப்., செமஸ்டர் மற்றும் 2020 ஏப்.,க்கான 'இம்ரூவ்மென்ட்' தேர்வுகள் மே 5 - ஜூன் 10 வரை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மே 8 வரை நான்கு தேர்வுகள் நடந்த நிலையில் மே 10 - 24 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மே 24க்கு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.


தற்போது மே 24 - 31 வரை ஊரடங்கு தொடர்வதாக அரசு அறிவித்துள்ளதால் மீண்டும் செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையர் (பொறுப்பு) தர்மராஜ் தெரிவித்துள்ளார்.