சென்னை:கொரோனா தொற்று பரவலை தடுக்க, அரசு எடுத்து வரும் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு, அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்க, பல்வேறு பணியாளர் சங்கங்கள் விருப்பம் தெரிவித்தன.

அதை ஏற்ற அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை, மே அல்லது ஜூன் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளது.