1620570733145928

 கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துவத் தேவையாக இருந்தாலும், வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.


அதன்படி, மருந்து மற்றும் மருத்துவத் தேவை உள்ளவர்கள் 9342066888 என்ற எண்ணை தொடர்புகொண்டால் வீட்டுக்கே மருந்து வந்துவிடும் என்றும், கொரோனா நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு 50% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.