பௌர்ணமியும் அமாவாசையும் திரிந்த நிலையில் வழங்கப்பட்ட‌ வழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள் ஆகும். இந்த‌ சொற்கள் தோன்றிய முறைகளில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம். பூரித்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு நிறைதல் என்று பொருளுண்டு. நீமம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஒளி என்ற பொருளுண்டு. இவ் இரண்டு சொற்களின் சேர்க்கையில் உருவானதே பௌர்ணமி.

பூரி (=நிறை) + நீமம் (=ஒளி) = பூரிநீமம்  பூர்நிமம் பூர்ணிமா = நிறைவான ஒளிநிலை = முழுநிலா.

ஆக‌, பூர்ணிமா என்ற சொல்லே பௌர்ணமை, பௌர்ணமி என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பூர்ணிமா, பௌர்ணமி, பௌர்ணமை ஆகிய யாவும் தமிழே என்று அறியலாம்.

பௌர்ணமியைப் போலவே அமாவாசை என்கின்ற‌ சொல்லும் மருவிய தமிழ்ச் சொல்லே. அவிதல் என்றால் அணைதல், கெடுதல், அழிதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. இதனின்று தோன்றிய அவிச்சை என்பது அழிவு / கேட்டைக் குறிக்கும். அம் என்றால் அழகு, ஒளி என்று பொருள்படும். இவ் இரண்டின் சேர்க்கையால் உண்டானதே அமாவாசை ஆகும்.

அம் (=ஒளி) + அவிச்சை (=அழிவு) = அமவிச்சை >>> அமாவிசை >>> அமாவாசை = ஒளியின் அழிவு = இருள் நிலை.

எனவே, அமாவாசை என்பதும் தமிழ்ச்சொல்லே என்று அறியலாம்.