சென்னை:பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பனுக்கு, ஒருங்கிணைந்த கூடுதல் திட்ட இயக்குனர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். பள்ளி கல்வி இயக்குனர் பதவியில், கமிஷனர் அந்தஸ்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டார்.பள்ளி கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பனுக்கு, ஒரு வாரமாக எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. அவருக்கு மீண்டும் உரிய பொறுப்பை வழங்க வேண்டும் என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின.

இதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கூடுதல் இயக்குனராக, கண்ணப்பன் நேற்று நியமிக்கப்பட்டார்.அதேநேரம், பள்ளி கல்வி இயக்குனர் என்ற பதவி உண்டா, இல்லையா என்ற தெளிவான அரசாணை வெளியாகாததால், குழப்பம் இன்னும் நீடிக்கிறது என, ஆசிரியர்கள் கூறினர்.