திருப்பதி:ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருமலை தேவஸ்தானம் முன் வந்துள்ளது.

ஆந்திராவின் நெல்லுார் மாவட்டம், கிருஷ்ணபட்டணத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கி வந்தார். இந்த மருந்தின் மேல் மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை வந்துள்ளது.

இந்நிலையில், இந்த மருந்து குறித்து அறிந்த, திருப்பதி திருமலை தேவஸ்தானம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுர்வேத பல்கலைகழக அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரை நேரடியாக கிருஷ்ணபட்டணம் அனுப்பி உள்ளது. அவர்கள், ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவை சந்தித்து உரையாடி, மருந்து தயாரிக்கப் பயன்படும் வனமூலிகைகள், அதன் தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவற்றை நேரடியாக பார்வையிட்டனர்.

 மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி கிடைத்ததும், இந்த ஆயுர்வேத மருந்தை அதிக அளவில் தயாரித்து மக்களுக்கு வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிக பெரிய ஆயுர்வேத பல்கலை மற்றும் மருந்து தயாரிப்பு கூடம் திருப்பதியில் உள்ளது.

எனவே, இந்த மருந்தை தயாரித்து தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகம் வாயிலாக மக்களுக்கு வினியோகிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.இதற்கிடையே, 'ஆனந்தய்யா, பல ஆண்டுகளாக பாரம்பரியமாக ஆயுர்வேத முறைப்படி மருந்து தயாரித்து வருகிறார். அவர் சிகிச்சையை தொடரலாம். இதற்கு எந்த எதிர்ப்பும் இருப்பதாக தெரியவில்லை' என, ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.