தமிழகத்தில் புதிதாக ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று (மே 25) 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் இன்று மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில்,
* சுற்றுலாத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த விக்ரம் கபூர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
* சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சித்துறையில் முதன்மை செயலராக இருந்த மங்கத் ராம் சர்மா, நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலை மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மையின் முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
* சிறுதொழில் நிறுவனங்களுக்கான இயக்குனர் மற்றும் செயலராக இருந்த விபுநாயர், நிலப் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து துறை இயக்குனராக ஜெயஸ்ரீ ரகுநந்தன் மாற்றப்பட்டுள்ளார்.
* நேற்று காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனராக இருந்த சிகி தாமஸ் வைத்யன், கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* மேலும் சில துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment