தமிழகத்தில் ஜுலை மாதத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா  2ஆவது அலை தீவிரமாக பரவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்தன.இதனை ஏற்ற தமிழக அரசு பொதுதேர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் 12ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அலகுத் தேர்வுகள்,திருப்புதல் தேர்வுகளை ஆன்லைனில் ஜூன் மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கொரோனா கட்டுக்குள் வராவிட்டல் திருப்புதல் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்  தேர்ச்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் வாட்ஸ் ஆப்பில் வினா தாள்களை அனுப்பி விடைகளை எழுதி வாங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.