சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருப்பவர் தீரஜ்குமார். இவர் நெற்குன்றம் அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.