சென்னை:தமிழக உள் மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்த மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக கடலோர பகுதியை ஒட்டி, வங்க கடலில், 3.6 கி.மீ., உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கர்நாடகாவில் இருந்து, தெற்கு கேரளா வரை, வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. எனவே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.
தமிழக உள் மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு இயல்பை விட, 2 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், காற்றின் வெப்பநிலை அதிகரித்து, வெக்கையாக இருக்கும்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், ஆண்டிபட்டி, சிவலோகத்தில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. கள்ளிக்குடி, கோவில்பட்டி, ஆலங்குடி, வேதாரண்யம், அணைப்பாளையத்தில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
0 Comments
Post a Comment