சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல், மின்னல் வேகத்தில் அதிகரித்தபடி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்போர் எண்ணிக்கையும், உயர்ந்து வருகிறது. கொரோனா நோய் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, ஆங்காங்கே புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, தலைமை செயலகத்தில், தலைமை செயலர் ராஜிவ்ரஞ்சன் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய்த்துறை, போலீஸ் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கொரோனா தொற்று தடுப்புக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்படலாம், ஞாயிறு முழு ஊரடங்கு இருக்கலாம் என்ற தகவல்கள் பரவின. ஆனால், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும், வெளியிடப்படவில்லை.
0 Comments
Post a Comment