டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பு:துறைத்தேர்வு நடைமுறையை சீரமைக்க, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஜூன் மாதம் நடக்க உள்ள, துறைத்தேர்வுகள், 'ஆன்லைன்' வழியே நடத்தப்பட உள்ளன.


பல்வேறு துறைகளிடம் இருந்து பெறப்பட்ட, கருத்துருக்கள் அடிப்படையில், திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கொள்குறி வகை தேர்வுகளுக்கான, துறைத் தேர்வுகள், ஆன்லைனில் நடத்தப்படும். விரிந்துரைக்கும் வகையான தேர்வுகள், தற்போதுள்ள நடைமுறையின்படி, எழுத்து தேர்வு வகையிலேயே தொடரும்.ஆன்லைன் தேர்வுகள், ஜூன், 22 முதல், 26 வரை நடக்கும். விரிந்துரைக்கும் வகை எழுத்து தேர்வுகள், ஜூன், 27 முதல் நடக்கும். துறைத் தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள், தேர்வாணைய இணையதளத்தை தொடர்ந்து  கண்காணிக்கவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.