புதுடில்லி:எம்.டி., - எம்.எஸ்., போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வை, நாளை மறுநாள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில் வைத்து, அந்த நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுஉள்ளது.இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளதாவது:கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் வைத்து, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேர்வுகளின் புதிய தேதிகள் குறித்த அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments
Post a Comment