*சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

அரசு பள்ளிகளுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த நவம்பர் 20ஆம் தேதியும் ஜனவரி 2ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டன.


இவற்றில் வேதியியல், வரலாறு, பொருளியல், தமிழ், அரசியல், அறிவியல், உயிர் வேதியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு என்பது கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்து குறிப்பாக வேதியியல் பாடத்திற்காக 121 பின்னடைவு பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்கள் உட்பட மொத்தம் 356 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.


அதற்காக தேர்வு வாரியம் தயாரித்திருந்த தற்காலிக தேர்வு பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்று பொது பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 பேரையும் பட்டியலினத்தவர் 5 பேரையும் பொதுப்பிரிவில் சேர்க்காமல் அவரவர் சமூக பிரிவில் ஆசிரியர் தேர்வு வாரியம் சேர்த்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


 


 இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த தேர்வு வாரியம் இட ஒதுக்கீடு விதிகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்துவிட்டு இட ஒதுக்கீட்டு விதிகளின் படியே புதிய பட்டியலை தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.


இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் இருநபர் நீதிபதி அமர்வு முன் மேல்முறையீடு செய்தது. அதில் வேதியியல் தவிர பிற பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை பிப்ரவரி மாதமே நிரப்பி பணி ஆணைகளை வழங்கி விட்டோம்.
எனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பாக ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதிக மதிப்பெண்கள் பெற்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த ஆசிரியர்களை பொது பிரிவில் சேர்க்காமல் இட ஒதுக்கீடு பிரிவில் சேர்த்தது தவறு என தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான அமர்வு தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.