அசைவ விரும்புவர்களுக்கு இப்போதெல்லாம் கிரில்டு மட்டுமே பிடிக்கிறது. கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதை படிங்களேன்.உணவுன்னா ருசியா இருக்கணும் என்று தேடி தேடி ருசிப்பவர்களுக்கு எப்போதுமே க்ரில்டு உணவுகள் மீது தனி பிரியம் இருக்கும். அதிலும் அசைவ பிரியர்கள் பெரும்பாலும் க்ரில்டு உணவை தான் விரும்பவே செய்கிறார்கள். கண்ணுக்கும் விருந்தளிக்கும், கூடுதலாக அதை பார்த்தவுடன் உமிழ்நீர் சுரக்கும்.


குறிப்பாக க்ரில்டு உணவுகள் சக்கையான இறைச்சியையும் கூட சுவையானதாக மாற்றிவிடக்கூடும். மேலும் இது சமைக்கும் முறை ஆரோக்கியமற்றவை என்பதோடு பக்கவிளைவுகளையும் உண்டாக்குபவை. என்ன மாதிரியான பாதிப்புகளை நீங்கள் கொள்கிறீர்கள் என்பது தெரிந்தால் இனி சாப்பிடுவதற்கு முன்பு யோசிப்பீர்கள். 


புற்றுநோய்கள் அபாயம்..


க்ரில்டு உணவுகள் சமைக்கும் போது மிக அதிக வெப்பநிலையில் சமைக்கப்படுகிறது அப்போது பாலிசிஸ்டிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (polycystic aromatic hydrocarbons (PAH) )எனப்படும் இயற்கை ரசாயனங்களை உருவாக்குகிறது. இந்த ரசாயனங்கள் உணவுக்குழாய் மற்றும் பெருங்குடல் உள்ளிட்ட சில புற்றூநோய்கள் அபாயத்துடன் தொடர்பு கொண்டவையாக சொல்லப்படுகிறது. உணவு எரிக்கப்படும் போது உண்டாகும் இவை இறைச்சியை நேரடியாக தொடர்பு கொள்ளும்போது அதிகமாகவே உள்ளது. வெகு அரிதாக சாப்பிடுபவர்களை காட்டிலும் அடிக்கடி க்ரில்டு உணவை நாடுபவர்களுக்கு புற்றுநோய் அபாயத்துக்கான வாய்ப்பும் சற்று அதிகமே. 


நீரிழிவு உயர் ரத்த அழுத்தம்..


க்ரில்டு உணவுகள் இந்த நோயை உருவாக்குகிறது என்று சொல்லாத அளவுக்கு நீரிழிவும் ரத்த அழுத்தமும் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இந்த பாதிப்பு கொண்டிருப்பவர்கள் க்ரில்டு உணவை அதிகம் விரும்பு போது இதில் இருக்கும் சர்க்கரை மற்றும் சோடியம் இரண்டும் உடலுக்கு நன்மை செய்யாது. இது உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதில் இருக்கும் இனிப்பு நீரிழிவு அதிகப்படுத்தும். அதே போன்று தொடர்ந்து க்ரில்டு உணவை விரும்புவர்கள் மறைமுகமாக தங்கள் உடலில் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு அபாயத்தை அதிகரித்துகொள்கிறார்கள். 


அழற்சி தன்மை..


உடல் ஆரோக்கியத்துக்கு உணவு தான் முதன்மை தேவையாகிறது.தாவர உணவுகளையும் சூடுபடுத்தி தான் எடுத்துகொள்கிறோம். ஆனால் இது அதிகமான வெப்பநிலையில் சமைக்கப்படுவதில்லை. ஆனால் க்ரில்டு உணவுகள் உங்கள் உடலில் சிக்கலையே உண்டாக்கும் தன்மை கொண்டது. ஏனெனில் உணவை உண்பதற்கான தயாரிப்பு முறைகள் மேலும் அதிகமாக மேம்படுத்தி சமைக்கும் போது கிளைகோடாக்சின்கள் என்றழைக்கப்படுகிறது. இது செரிமான அமைப்புகளால் செரிக்கப்படாத டாக்சின்கள். உணவு வறுக்கப்பட்டு பிறகும் பல பொருள்களுடன் மீண்டும் மீண்டும் வெப்பநிலையில் வைத்து எடுப்பது உடலில் அழற்சியை உண்டாக்கவே செய்யும். நாள்பட்டு இதை எடுக்கும் போது இது அதிகமாகவே புற்றுநோய் உட்பட பல நாள்பட்ட நோய் வளர்ச்சியில் அதிகப்படியான அழற்சியை உண்டாக்கும். அதனால் ஒவ்வொரு முறை நீங்கள் க்ரில்டு உணவை எடுக்கும் போதும் இது குறித்த எச்சரிக்கை உணர்வு அவசியம் தேவை. 


மலச்சிக்கல்..


நன்றாக கவனித்து பாருங்கள். எப்போதெல்லாம் நீங்கள் க்ரில்டு உணவை சுவைக்கிறீர்களோ அதிலும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் எடுத்துகொள்ளும் போது நீங்கள் மலம் கழித்தலில் சிக்கலை உணர்வீர்கள். இறைச்சிகள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தான். ஆனால் அதில் உடலுக்கு வேண்டிய நார்ச்சத்து இருக்காது. நார்ச்சத்து தான் குடல் இயக்கங்களை நகர்த்தக்கூடியவை. பொதுவாக இறைச்சியோடு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளும் சேர்க்கும் போது குடல் இயக்கங்கள் பிரச்சனி அளிக்காது. ஆனால் வெறும் க்ரில்டு உணவுகளை மட்டுமே ருசித்தால் நீங்கள் மலச்சிக்கலை அனுபவிக்கவே நேரிடும். 


கொழுப்பு அதிகரிக்கும்..


கொழுப்புகளில் நல்ல கொழுப்புகள் கெட்ட கொழுப்புகள் என்று இரண்டு வகை உண்டு. எல்.டி.எல் என்னும் கெட்ட கொழுப்புகள் உடலில் அதிகரிக்கும் போது அது இதயத்தை பாதிக்க செய்யும். இதய நோய்க்கான அபாயத்தை உண்டு செய்யும். அதிக நிறைவுற்ற கொழுப்பு கொண்டிருக்கும் க்ரில்டு உணவுகள் இதயத்துக்கு நன்மை செய்யாது. உங்களுக்கு க்ரில்டு உணவுகள் மீது ஆசையாக இருந்தால் நீங்கள் இதை தேர்வு செய்யும் போது சிவப்பு இறைச்சியை மட்டுமே இல்லாமல் உடன் மெலிந்த இறைச்சி, மீன் போன்றவற்றையும் தேர்வு செய்யலாம். அதே நேரம் ஏற்கனவே இதய நோய் சம்பந்தமான ஆரோக்கிய குறைபாடு இருந்தால் அவர்கள் க்ரில்டு உணவுகளை தவிர்ப்பதே இதயத்துக்கு நல்லது. 


உடல்பருமனை உண்டாக்கும்..


உங்களுக்கு உடலின் மீது உடல் எடையின் மீது அதிக கவனம் இருந்தால் நீங்கள் இந்த உணவுகளிலிருந்து தள்ளி இருக்க வேண்டும் ஏனெனில் இவற்றீல் அதிக உப்பு, அதிக கொழுப்பு உண்டு. அதோடு இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துகள் மிக குறைவாகவே இருக்கும். அதோடு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் பருமன் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இந்த அதிகரிக்கும் உடல் எடை உண்டாக்கிவிடும். அதனால் உடல் எடை மீது விழிப்புணர்வு கொண்டிருப்பவர்கள் இந்த வகையான உணவை தவிர்ப்பதே நல்லது. 


பெண்களுக்கும் பாதிப்பு..


கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் பொதுவாக உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாவிற்கு சுவை கொடுப்பதால் இதை விரும்பினால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு உண்டாக கூடும். ஏனெனில் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது இதில் உள்ள பிஏஹெச் ஆனது நஞ்சுகொடியை கடக்கிறது. இது குழந்தையின் எடையை குறைக்க செய்யும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை பிறந்தவுடன் சில உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கவும் வாய்ப்புண்டு.


டீன் ஏஜ் பெண்கள் இந்த க்ரில்டு உணவுகளை அதிகம் விரும்பினால் அது எதிர்காலத்தில் கருவுறுதல் சவால்களையும் உண்டாக்க கூடும். ஏனெனில் ஆய்வு ஒன்றில் கருத்தரிக்கும் பெண்களின் கருப்பை ஆய்வு செய்தபோது அதில் உள்ள உயிரணுக்களின் வீக்கத்தை க்ரில்டு உணவில் இருக்கும் கிளைகோடாக்சின்கள் உண்டாக்குவதாக கண்டறியப்பட்டது. இளவயது பெண்கள் வறுக்கப்பட்ட இறைச்சிகளை அதிகம் விரும்புவது எதிர்காலத்தில் கருவுறுதலில் சவாலை உண்டாக்க செய்யும்.


அமிர்தமாக இருந்தாலும் நஞ்சு என்று சொல்வதுண்டு. இந்நிலையில் இவை உடலுக்கு நன்மை செய்யாது என்னும் போது அதிகம் இல்லாமல் அளவாக மிக அளவாக எடுத்துகொள்வதும் அதன் துணையோடு அதிக ஆரோக்கியம் நிறைந்த உணவையும் எடுப்பது அவசியம்.