ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் மற்றும் கலந்தாய்வு - ஏப்.30-ற்குள் Transfer-க்குப்பின் Promotion கலந்தாய்வுகளை நடத்திட உ.நீ.ம மதுரைக்கிளை உத்தரவு

🔥 

🛡 தமிழ்நாடு அரசு அரசாணை எண்.249 நாள் 21.05.2020-ன் படி பணியிட மாறுதல் வழங்குவதைத் தடைசெய்திருந்த நிலையில், தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்விற்கு மட்டுமான கலந்தாய்விற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

🔥

🛡 பணியிட மாறுதலை நடத்திவிட்டு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட வேண்டி 50-ற்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்டது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பிலும் தனிநபர் வழக்குகள் சென்னை மற்றும் மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்டது.

🔥

🛡 இவ்வழக்குகளை விசாரித்த நீதியரசர் திரு.எம்.எஸ்.ரமேஷ் பதவி உயர்வு கலந்தாய்விற்கு இடைக்கால தடை விதித்து சென்ற வாரத்தில் உத்தரவிட்டிருந்ததையடுத்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் தாம் முன்னதாக வெளியிட்டிருந்த பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை நிறுத்தி வைத்தார்.

🔥

🛡 எனினும், செலவினம் ஏற்படும் எனக் குறிப்பிட்டு பணியிட மாறுதல்களைத் தடை செய்திருந்த தமிழக அரசின் அரசாணை எண்.249 நாள் 21.05.2020 நடைமுறையில் இருந்ததால் ஆசிரியர் பணியிட மாறுதல் நடைபெறுவதில் சிக்கல் இருந்தது.

🔥

🛡 எனவே இவ்வரசாணையை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் துணைப் பொதுச்செயலாளர் திரு.தா.கணேசன் பெயரில் தனிநபர் வழக்கு  தொடுக்கப்பட்டது.

🔥

🛡 இன்று (02.03.2021) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இவ்வழக்கில், ஆசிரியர் பணியிட மாறுதல் வழங்குவதில் அரசிற்கு எவ்விதச் செலவினமும் ஏற்படப்போவதில்லை என்ற நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் திரு.லஜபதிராய் அவர்களின் வாதங்களை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் திரு.எம்.எஸ்.ரமேஷ் அவர்கள் ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்தியபின் பதவி உயர்விற்கான கலந்தாய்வினை ஏப்ரல் 30-ற்குள் நடத்தி முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

தோழமையுடன்

ச.மயில்

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி