மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில் 2021-2022 ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் அட்மிஷன் விண்ணப்பம் 01.04.2021 காலை 10 மணிக்கு ஆரம்பமாகின்றது. விண்ணப்பிக்க கடைசி நாள் 19.04.2021 மாலை 7 மணி வரை.

https://www.kvsonlineadmission.kvs.gov.in 

என்ற வலைதளத்திலும் மேலும் ஆன்ட்ராய்டு மொபைல் உபயோகிப்பவர்கள்   

https://www.kvsonlineadmission.kvs.gov.in/apps/ 

என்ற URL google play store ன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆண்டு குடும்ப வருமானம் ரூ 8லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் OBC- NCL எனும் கோட்டாவிலும் ,ஒரே பெண்குழந்தை மட்டும் உள்ளவர்கள் SGC எனும் கோட்டாவிலும் விண்ணப்பிக்கலாம். RTE எனப்படும் கட்டாய கல்வி சட்டப்படி கோட்டாவில் விண்ணப்பிக்கும் மேலும் சீட் கிடைக்கும் பட்சத்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கலாம் ஆகவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அனைவருக்கும் பகிருங்கள் யாருக்கேனும் உபயோகமாகும்.

மேலும் இரண்டாம் வகுப்பு முதல் 08.04.2021 காலை 8 மணிமுதல் 15.04.2021 மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம்.