புதுடில்லி:வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, 'சிலிண்டர்' விலை, இன்று முதல், 10 ரூபாய் குறைக்கப்படுவதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.


சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. கொரோனா தொற்றுபெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறையும் மாற்றம் செய்யப்படுகின்றன.


கடந்த ஆண்டு துவங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக, சர்வதேச அளவில், பெட்ரோல், டீசல் பயன்பாடு கடுமையாக குறைந்தது. இதைஅடுத்து, எண்ணெய் உற்பத்தியை நிறுத்திக் கொள்ள, உற்பத்தி நாடுகள் முடிவு செய்தன. இது சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது.


இதையடுத்து, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில், 1 லிட்டர் பெட்ரோல், 100 ரூபாயை கடந்தது. வீடுகளில் பயன்படுத்தப் படும் சமையல் எரிவாயு வின் விலை, 125 ரூபாய் வரை விலை உயர்ந்தது. சென்னையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, 835 ரூபாயாக உள்ளது.


இது குறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை, கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை, மூன்று முறை குறைந்துஉள்ளன. வாய்ப்புஇந்த நிலை அப்படியே தொடரும் என எதிர்பார்க்கிறோம். எனவே, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, வரும் நாட்களில் உயராது. அவை, மேலும் குறையவே வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


இந்நிலையில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, இன்று முதல், 10 ரூபாய் குறைக்கப்படுவதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்தது.