🅱️REAKING NEWS...✒️
💢ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமான பி.எஃப். வட்டிக்கு வரி
ஓராண்டில் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) கணக்கில் பணம் செலுத்தப்பட்டால், அதற்கான வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மாத வருவாய் ஈட்டும் பிரிவினருக்கு அதிா்ச்சியளிக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது.
முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படும் என்பதால் பெரும்பாலான மக்கள் வருங்கால வைப்பு நிதியில் அதிக பணத்தை சேமித்து வருகின்றனா்.
இது தொடா்பாக நிதிநிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :-
அதிக மாத வருவாய் ஈட்டும் பணியாளா்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையை நெறிமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருங்கால வைப்பு நிதியில் பணம் செலுத்தப்பட்டால், அதன் மூலம் கிடைக்கும் வட்டி மீது வரி விதிக்கப்படும்.
இதுவே மாதம் ரூ.20,000-க்கு மேல் வருங்கால வைப்புநிதியில் செலுத்தப்பட்டாலும் வட்டி மீது வரி உண்டு. 2021 ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
வருவாயை அதிகரிக்க மத்திய அரசு ஏற்கெனவே, பல்வேறு வரிச் சலுகைகளைக் குறைத்துவிட்டது. இறுதியாக வருங்கால வைப்பு நிதி மட்டுமே முழுமையாக வரிச் சலுகை அளிக்கும் சேமிப்பாக இருந்தது. இப்போது, அதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment