*மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி மொழி:*
*நாள் : 24.02.2021*
👉 *இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன்.*
👉 *எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன்.*
👉 *எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன்.*
👉 *மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன்.*
👉 *இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன்.*
👉 *குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன்.*
👉 *நான், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன்.*
👉 *இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.*
0 Comments
Post a Comment