புதுடில்லி:கொரோனா காரணமாக இந்தாண்டு சி.பி.எஸ்.இ., 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 23 சதவீத மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரல் ஆனது.இதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.


அதாவது, ''சமூக வலைதள தகவல் போலியானது. வழக்கம்போல் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி'' என கூறியுள்ளது.சி.பி.எஸ்.சி., பொதுத்தேர்வு செயல்முறை தேர்வுகள் 2021 மார்ச் முதல் தேதி துவங்கும். எழுத்துத்தேர்வு மே 4ல் துவங்கி ஜூன் 10 வரை நடக்க உள்ளது. தேர்வு முடிவு ஜூலை 15ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.