நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த வருடம் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதையடுத்து பள்ளி திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. இதையடுத்து பெற்றோர்களின் கருத்துப்படி பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு 20ஆம் தேதி முதல் பள்ளிகளில் திறக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.