தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . Minnal kalviseithi இத்தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை மூலம் அறிவித்து படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் 31.01.2021 க்குள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து 


பள்ளிக் கல்வி இயக்குநர் , பள்ளிக் கல்வி இயக்ககம் , சென்னை - 6 


என்ற முகவரிக்கு நேரிடையாக அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . விண்ணப்பங்களும் , விண்ணப்பத்திற்குரிய தகுதிகள் பற்றிய விவரங்கள் ஆய்வு அலுவலர்களின் மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . எனவே , அதன் விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரிய , ஆசிரியைகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இப்படிப்புதவித் தொகை பெறும் விவரம் தெரியவில்லை என்று தெரிவிக்காத வண்ணம் , எந்த விதமான புகாரும் எழாத வகையில் விழிப்புடன் செயல்படுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் மீண்டும் அறிவுறுத்தப்படுகின்றனர் . இத் தொழிற்கல்வி படிப்புதவித் தொகை குறித்து அலுவலக தகவல் பலகையில் விரிவான விளம்பரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


விண்ணப்பங்களை அனுப்பும் போது கீழ்கண்ட குறிப்புகளை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.


Teacher's Children Scholarship -  Instructions - Download here...


Teacher's Children Scholarship - Forms - Download here...