சென்னை: வனக் காப்பாளர் பணிக்கான சான்றிதழ் சரி பார்த்தல் மற்றும் உடல் திறன் தேர்வுகள், மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து, வன சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:வனத் துறையில், 320 வனக் காப்பாளர் பணிக்கான, 'ஆன்லைன்' தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதற்கு பிந்தைய நடவடிக்கைகள், கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன.கொரோனா பாதிப்பு குறைந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டன.இதன்படி, டிச., 5ல் சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கும் எனவும், உடல் திறன் தேர்வு, டிச., 8ல் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, இத்தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.