பள்ளிகளை திறந்து, பொது தேர்வு மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து, அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். கல்லுாரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், அனைத்து வகை பள்ளிகளையும் திறக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் தரப்பில், கோரிக்கை வலுத்து வருகிறது.

குறிப்பாக, பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமாவது, நேரடி வகுப்புகளை விரைவில் துவங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் தலைமையில், பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். முதற்கட்டமாக அதிகாரிகளும், பின் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலும், ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதில், பள்ளிகளை மீண்டும் திறப்பது, அதற்கான அனுமதியை அரசிடம் பெறுவது, பொது தேர்வு மாணவர்களுக்கு சமூக இடைவெளியுடன் நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்த, திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.