புதுடில்லி: வரும் டிசம்பர் 24ம் தேதி 397 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழனும் சனியும் மிக அருகில் சந்திக்க உள்ளன.

கடந்த 1623 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த இரு கிரகங்களும் இவ்வளவு அருகில் சந்தித்ததில்லை என்று புகழ்பெற்ற பிர்லா கோளரங்கத்தின் தலைவர் தேபி பிரசாத் துரை தகவல் அளித்துள்ளார்.

டிச.,21 அன்று இந்த இரு கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் ஒரு பெரிய நட்சத்திரம்போலக் காட்சியளிக்கும் என அவர் கூறியுள்ளார். இதற்குப் பெயர் கஞ்சங்ஷன். வியாழனும் சனியும் இணையும் இந்த நிகழ்வின் பெயர் கிரேட் கஞ்சங்ஷன் ஆகும். இதற்குப் பின்னர் வரும் 2080ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி அன்று இந்த இரு கிரகங்களும் மிக அருகில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.