நாம் பணி மாறுதலோ அல்லது பதவி உயர்விலோ வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்லும் போது, பணியேற்பிடைக் காலம் அனுபவிக்காத நிலையில், அதற்கு ஈடாக, நமது ஈட்டிய விடுப்பு சேமிப்பு கணக்கில் 5 நாட்கள் நம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என்ற விதி நடைமுறையில் உள்ளது. நாம் பதிய மறந்தோ அல்லது காலம் தவறி விட்டது இனிமேல் அதை பதிவு செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் இருந்தால், தற்சமயம் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அரசாணையை மேலே பகிர்ந்துள்ளேன். பதிய தவற விட்டவர்கள், அடுத்த குறை தீர் கூட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
0 Comments
Post a Comment