ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து வகை பள்ளிகளில் ( Govt . , Aided , Unaided ) Online Entry , புதிய பதிவேற்றம் மற்றும் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்களை புதுபித்தல் சார்ந்து EMIS-- ல் மேற்கொள்ளப்பட வேண்டிய கீழ்கண்ட பணிகளை முறையாக செயல்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. பள்ளியில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் விவரம் EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதையும் , புதிய பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து மாணவர்கள் விவரங்கள் சரியானவை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

* ஆதார் எண் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் EMIS- ல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 

* புதியதாக ஒரு மாணவன் EMIS- ல் பதிவேற்றம் செய்வதற்கு முன் வேறுப் பள்ளி ( அ ) Common Pool- ல் மாணவர் விவரம் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே , புதிய மாணவர் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

* Double Entry மாணவர் விவரங்களில் Duplicate Entry மாணவர்களை கண்டறிந்து Common Pool -க்கு அனுப்பிவிடுதல் வேண்டும்.

* RTE- ன் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல் . தனியார் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர் விவரங்கள் முறையாக EMIS- ல் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்தல் வேண்டும்.

* தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கினால் , அவ் ஆசிரியர் விவரம் EMIS- ல் நீக்கப்பட்ட பின்பு புதிய நியமன ஆசிரியர் விவரம் உள்ளீடு செய்யப்பட்டதை , ஆசிரியர் பயிற்றுநர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

* OSC NRSTC மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்தல் ( Tagging ) 

* IE ( Category wise ) மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்து , சார்ந்த பள்ளி ஆசிரியர் பயிற்றுநர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

• UDISE + -6ů Infra Structure ( CAL , Toilets , Classrooms , Land Details , Building , Drinking Water , Ramp , Compound Wall , Electrification ) , Training Details தவறுதலின்றி சரியான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்தல் மற்றும் மேற்கண்ட விவரங்கள் மாற்றங்கள் இருப்பின் அவ்வப்போது பதிவுகளை புதுப்பித்தல் செய்ய வேண்டும்.

* அரசு வழங்கும் விலையில்லா பொருட்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்கள் பதிவு செய்தல்.

* குறுவளமைய தலைமை ஆசிரியர்கள் தொடக்கநிலை / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்கள் EMIS - 60 முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை , தொடர் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும். 

* உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் சார்ந்த விவரங்கள் அந்தந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் EMIS- ல் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை , தொடர் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும். 

* அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் உட்கூறு சார்ந்த விவரங்கள் EMIS- ல் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்காணித்து உறுதிபடுத்த வேண்டும்.

 மேற்காண் அனைத்து அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை EMIS- ல் முறையாக தொடர்ந்து கண்காணித்து எவ்வித தொய்வின்றி செயல்படுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் , குறுவளமைய தலைமை ஆசிரியர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , வட்டார மைய ( பொ ) மேற்பார்வையாளர் , கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.