தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு முன்தாக மேற்கொண்டவேண்டிய  பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் பல்வேறு புதிய தளர்வுகளுடன் வரும் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் வரும் 16 ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 

செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் அமைப்பது.

மாணவர்களுக்கு தேவையான கிருமி நாசினிகளை தயார் நிலையில் வைப்பது. அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.