தமிழகத்தில் அடுத்தகட்ட தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானதுஅதில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதேசமயம் மாநில அரசு மற்றும் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுமுன்னதாக தமிழக அரசு சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டனஅதன்படி,

TN School Open

பள்ளிகளில் நுழையும் போது ஒவ்வொருவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.


வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும்இதற்காக வெவ்வேறு கால அட்டவணைகள் பின்பற்றப்பட வேண்டும்.

  

வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்பகுதிகளில் தரையில் வட்டங்கள் வரைந்திருக்க வேண்டும்அதில் மாணவர்கள் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

 

காலை வழிபாட்டுக் கூட்டம்மாணவர்கள் கூடுதல்விளையாட்டுகள்கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும்நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

 

பள்ளி ஆய்வகம்வகுப்பறைபொதுப் பயன்பாட்டு இடங்களை 1 சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைட் கரைசல் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

 

மாணவர்கள் கைகழுவுவதற்கு சோப்புசானிடைசர்கள் உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும்உரிய தண்ணீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

பள்ளிகளில் பயோமெட்ரிக் பதிவேட்டிற்கு பதில் தொடுதல் இல்லாத வகையில் வருகைப் பதிவேடு வைத்திருக்க வேண்டும்.

 

மாணவர்கள்ஆசிரியர்கள்ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்இதனை பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

 

தமிழகத்தில் பள்ளிகல்லூரிகள் திறப்பு தேதி இதுதான்ஆன்லைன் வகுப்பிற்கு குட் பை!

 

பள்ளி லிஃப்ட்கள்படிக்கட்டுகள்கைப்பிடிகள் ஆகியவற்றைத் தொடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

 மாணவர்கள்ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனே தெரிவிக்க வேண்டும்.

  


ஆசிரியர்கள்மாணவர்கள் அனைவரும் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

 

மாணவர்கள் தங்களது நோட்டுப் புத்தகம்பேனாபென்சில்அழிப்பான்தண்ணீர் பாட்டில் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக் கூடாது