மதுரை:புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவ., 26ல் அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் அகில இந்திய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பங்கேற்கிறது.

மதுரையில் சங்க மாநில பொது செயலாளர் செல்வம் கூறியதாவது:மத்திய, மாநில அரசு துறைகளில் காலியாகவுள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்த, தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளை நிறுத்திட வேண்டும். மத்திய அரசின் கட்டாய ஓய்வு குறித்த அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

தமிழகத்தில் ஓய்வு வயதை 59 ஆக உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறைகளை சேர்ந்த 80 சங்கங்கள் பங்கேற்கின்றன என்றார்