*வங்கக் கடலில் புயல் உருவாகி வருவதைக் குறிக்கும் வகையில் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு*


வங்கக் கடலில் புயல் உருவாகி வருவதைக் குறிக்கும் வகையில், பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


புயல் உருவாகக்கூடிய வானிலை உருவாகியுள்ளது, துறைமுகத்தில் பலத்த காற்று வீசும் என்பதைக் குறிக்க ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படும்.


அந்த வகையில், பாம்பன், தூத்துக்குடி, நாகை, கடலூர், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.