சென்னை :'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், முதல் வகுப்பில் இருந்தே, தமிழ் மொழி பயிற்றுவிக்க உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தாய்மொழியாம் தமிழை கற்பிக்க, பல்வேறு கடும் நிபந்தனைகளை, மத்திய அரசு விதித்திருப்பதற்கு கடும் கண்டனம். தமிழ் மொழி மீதுள்ள வெறுப்புணர்வை, மத்திய அரசு கைவிட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், முதல் வகுப்பிலிருந்தே தமிழ் மொழி பயிற்றுவிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.பிஷப்புகள் சந்திப்புகிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில், கிறிஸ்துவ திருச்சபைகளின் பிஷப்புகள் சந்திரசேகரன், சர்மா நித்தியானந்தா, பக்தசிங் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த, தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச்சங்க மாநில தலைவர் தியாகராஜன் தலைமையில் நிர்வாகிகள், ஸ்டாலினை சந்தித்தனர்.பள்ளிகள் திறப்பு விவகாரம் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கேட்டு போராடிய மாணவர்களுக்கு குரல் கொடுத்து வெற்றி கண்டதற்காக, ஸ்டாலினுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.