பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவு மற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இன்று முதல் வருகிற 28 ஆம் தேதி தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலமாக நான்கு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த கலந்தாய்வில் ஒவ்வொரு கட்ட கலந்தாய்வு முடிவிலும் மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதேபோல் தொழிற்துறையினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முன்னதாக பொறியியல் படிப்புக்காக 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களில் 1 லட்சத்து 15,088 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்தனர். இதையடுத்து கடந்த 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 'மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று நிறைவுற்றது குறிப்பிடத்தக்கது.