சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பொது பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. இதில் 1.10 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் பி.இ. - பி.டெக். படிப்பில் சேர்வதற்கு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு அக். 1 முதல் 6 வரை கவுன்சிலிங் நடத்தப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுஉள்ளன. இதையடுத்து பொது பிரிவு மாணவர்களுக்கு இன்று கவுன்சிலிங் துவங்க உள்ளது.

இந்த கவுன்சிலிங் மொத்தம் நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 1.10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு குறிப்பிட்ட தரவரிசை அடிப்படையில் ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.தொழிற்கல்வி மாணவர்களுக்கு இன்று முதல் ஒரே கட்டமாக கவுன்சிலிங் நடக்கிறது. மொத்தம்1.63 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அக். 28ல் பொது கவுன்சிலிங் முடிகிறது.


கவுன்சிலிங்கில் முதல் நான்கு நாட்கள் கட்டணம் செலுத்தவும் அடுத்த இரண்டு நாட்கள் விருப்ப பதிவை மேற்கொள்ளவும் அவகாசம் வழங்கப்படும்.ஆறாம் நாள் உத்தேச ஒதுக்கீடு வழங்கப்படும். ஏழாம் நாள் மாலைக்குள் ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். எட்டாம் நாளில் இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கப்படும்.அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் தரவரிசைக்கு ஏற்ப கவுன்சிலிங் தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


மாணவர்களின் 'லாக் இன்' பகுதியிலும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி இணையதளத்திலும் இந்த தேதி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.சிறப்பு பிரிவில்500 பேருக்கு இடம்இன்ஜினியரிங் சிறப்பு பிரிவு ஒதுக்கீடு, அக்.,1ல் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதில், விளையாட்டு வீரர்கள் பிரிவில், 1409 பேர் பங்கேற்று, 277 பேர் மட்டும் இடங்களை பெற்றனர்.

முன்னாள் படை வீரர்கள் பிரிவில், 855 பேர் பங்கேற்று, 133 பேர்; மாற்று திறனாளிகள் பிரிவில் 149 பேர் பங்கேற்று, 98 பேர் என மொத்தம் 508 பேர் இட ஒதுக்கீடு பெற்றுஉள்ளனர்.

கவுன்சிலிங் தேதி விபரம்சுற்று/மதிப்பெண்/தரவரிசை/கட்டண தேதி/விருப்ப பதிவு/உத்தேச ஒதுக்கீடு/முதல் சுற்று/199.667 முதல் 175 வரை/12,263 வரை/அக்.8 முதல், 11 வரை/அக்.12, 13/அக்.,142ம் சுற்று/145.5 வரை/35,167 வரை/அக்.12 முதல் 15 வரை/அக்.,16,17/அக்.183ம் சுற்று/111.75 வரை/70,300 வரை/அக்.16 முதல், 19 வரை/அக்.20, 21/அக்.,224ம் சுற்று/77.5 வரை/1,10,873 வரை/அக்.,20 முதல், 23 வரை/அக்.24, 25/அக்.26தொழிற்கல்வி/196.83 முதல், 87.5 வரை/1,533 வரை/அக்., 8 முதல், 11 வரை/அக்., 12 முதல், 13 வரை/அக்., 14சுற்று மதிப்பெண் தரவரிசை கட்டண தேதி விருப்ப பதிவு உத்தேச ஒதுக்கீடுமுதல் சுற்று 199.667 - 175 வரை 12,263 வரை அக்.8 முதல் 11 வரை அக்.12, 13 அக்.,142ம் சுற்று 145.5 வரை 35,167 வரை அக்.12 முதல் 15 வரை/அக்.,16,17/அக்.183ம் சுற்று/111.75 வரை/70,300 வரை/அக்.16 முதல், 19 வரை/அக்.20, 21/அக்.,224ம் சுற்று/77.5 வரை/1,10,873 வரை/அக்.,20 முதல், 23 வரை/அக்.24, 25/அக்.26தொழிற்கல்வி/196.83 முதல், 87.5 வரை/1,533 வரை/அக்., 8 முதல், 11 வரை/அக்., 12 முதல், 13 வரை/அக்., 14