பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய 196 பேரின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வினை 2017 செப்டம்பரில் நடத்தப்பட்டது.
இதில் தேர்வு எழுதிய 196 பேர், தலா 25 லட்சம் ரூபாய் முறைகேடாக பணம் கொடுத்து மதிப்பெண்கள் பெற்றது நிரூபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது. 'கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை.. பொறியியல் பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன' - நீதிமன்றம்
அதனைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 196 நபர்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய தேர்வுகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 நபர்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக வெளியிட்டுள்ளது. இதில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களின் பெயர் முகவரி ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
news 18
0 Comments
Post a Comment