தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல ருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை உறுதியானது. தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவராக என்.கீதா ( 55 ) பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு , கோவையிலிருந்து பணியிட மாற்றம் பெற்று தருமபுரியில் பணியாற்றி வருகிறார். கடந்த செப் .31 - ஆம் தேதி இவருக்கு சளி , காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அக் .1 - ஆம் தேதி அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் , தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதன்மைக் கல்வி அலுவலருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்