1603962354547


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்தவெளி வகுப்புகளை நடத்தலாம் என மருத்துவக்குழு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திறந்தவெளி வகுப்புகளை நடத்த சாத்தியம் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் தகுந்த பாதுகாப்புடன் வீட்டிலேயே இருந்து படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட்டுள்ளது.