சென்னை:சீர்மிகு சட்ட பள்ளியில் ஐந்தாண்டு படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப் பட்டு உள்ளது.தமிழ்நாடு டாக்டர்அம்பேத்கர் சட்ட பல்கலை வளாகத்தில் சீர்மிகு சட்ட பள்ளி செயல்படுகிறது. இங்கு ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டுகளுக்கான எல்.எல்.பி. ஹானர்ஸ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.ஐந்தாண்டு படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிந்தது. இதையடுத்து நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 'கட் -ஆப்' மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலவரத்தை tndalu.ac.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.