சென்னை : ஆசிரியர்கள் தினம் , இன்று கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இன்று எளிய முறையில் கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.தமிழக அரசின் சார்பில், 375 ஆசிரியர்கள், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும், 7ம் தேதி மாவட்ட வாரியாக விழா நடத்தி, விருது வழங்கப்படுகிறது. மாநில அளவிலான விருது விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னையால், அரசு பள்ளிகளில் விழா ஏற்பாடு செய்யப்படவில்லை. தனியார் பள்ளிகள் தரப்பில், 'ஆன்லைனில்' ஆசிரியர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.