ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர், கோவிட் சமயத்தில் டிஜிட்டல் கல்வி மூலம் குழந்தைகளை எதிர்காலத்துக்குத் தயார்படுத்தியதற்காக அவர்களைப் பாராட்டினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார்.

ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி உரையாற்றிய குடியரசுத் தலைவர், கோவிட் சமயத்தில் டிஜிட்டல் கல்வி மூலம் குழந்தைகளை எதிர்காலத்துக்குத் தயார்படுத்தியதற்காகவும், தேசிய கல்விக் கொள்கையை மாணவர்களுக்கு எடுத்துச் செல்வதற்காகவும் அவர்களைப் பாராட்டினார்

"தேசிய விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஆசிரியர்களின் உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த பங்களிப்புகளுக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.

முன்னதாக, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அவருடைய பிறந்த நாளில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர்

மாளிகையில் இன்று அஞ்சலி செலுத்தினார்.

டாக்டர் ராதாகிருஷ்ணனின் திருவுருவப்படத்திற்கு குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அதிகாரிகளும் மலரஞ்சலி செலுத்தினர்.