IMG-20191114-WA0034%252B%2525281%252529

சென்னை:'ஆன்லைன் வகுப்பில், கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, மாணவர்களை வற்புறுத்தக்கூடாது' என, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.

ஆலோசகர்கள்

முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனைத்து பள்ளிகளிலும், 'ஆன்லைன்' வகுப்புகளை கண்காணிக்க, ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள், 'ஆன்லைன்' வகுப்பு குறித்த விபரங்களை, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.பள்ளிகளில், ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்ட தேதி, ஆலோசகர் பெயர், பதவி, தொடர்பு எண், 'இ- - மெயில்' முகவரி போன்ற விபரங்களை பெற வேண்டும். அவர்களுடன், முதன்மைக் கல்விஅலுவலர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.

ஆன்லைன் வகுப்பு தொடர்பாக, புகார்கள் வருகிறதா என, கண்காணிக்க வேண்டும்.ஆன்லைன் வகுப்பு ஆலோசகர்கள் குறித்த விபரங்களை, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்.பள்ளி இணையதளத்திலும், அறிவிப்பு பலகையிலும் வெளியிட வேண்டும்.ஆன்லைன் வகுப்புகளுக்கு, வருகைப் பதிவேடு அல்லது மதிப்பெண்கள் கணக்கிடுவது கூடாது.

வற்புறுத்தக் கூடாது

ஆன்லைன் வகுப்புகளுக்கு, எக்காரணம் கொண்டும், மாணவர்களை வற்புறுத்தக் கூடாது; அது கட்டாயமல்ல. இணைய வழிக் கல்வி தொடர்பான புகார்களை, மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின், grievanceredressaltnpta@gmail.com என்ற, இ -- மெயில் முகவரிக்கு, பெற்றோர் அனுப்ப லாம். அந்த புகார்கள், உரிய நடவடிக்கைக்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான கவுன்சிலிங் பெற, '14417' என்ற, எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்விபரங்களை, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.